அஜித் ஆப்சென்ட்… அப்செட்டில் விஷால்
தன் தங்கை திருமணத்துக்கு நேரில் சென்று அழைப்பு வைத்தும் அஜித் வராததால் வருத்தத்தில் இருக்கிறார் விஷால்.
ரசிகர் மன்றங்கள் வேண்டாம். படத்தின் பிரஸ்மீட், பூஜை என எந்த புரமோஷனிலும் கலந்துகொள்ள மாட்டேன். அவ்வளவு ஏன்… படத்துக்கு இசை வெளியீட்டு விழா கூட வைக்க வேண்டாம். ஆனால், 1500 ரூபாய் வரை கொடுத்து டிக்கெட் வாங்கி ரசிகர்கள் படம் பார்க்க வேண்டும், நாம் அடுத்தடுத்து கோடிகளில் சம்பளத்தை ஏற்றிக்கொண்டே போகவேண்டும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார் அஜித்.
தான் வாழ்ந்து கொண்டிருக்கும் சினிமா துறைக்கு இதுவரை ஒரு நல்ல விஷயம் கூட செய்ததில்லை அஜித். அதுமட்டுமல்ல, சினிமாக்காரர்களின் நல்லது, கெட்டதுகளில் கூட அவர் கலந்து கொள்வதில்லை. விஷாலின் தங்கை ஐஸ்வர்யாவின் திருமணம் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அஜித் வீட்டுக்கு நேரில் போய் அழைப்பு வைத்தார் விஷால். ஆனால், அவர் வரவில்லை. தற்போதைய, வருங்கால ‘சூப்பர் ஸ்டார்’களான ரஜினிகாந்த், விஜய் ஆகியோர் வந்து வாழ்த்தினர். அஜித் வரவேண்டாம்… அவர் மனைவியையாவது அனுப்பியிருக்கலாம் அல்லவா? அதையும் செய்யவில்லை. ஆனால், அவருக்காகத்தான் சிலைகள் செய்தும், பாலாபிஷேகம் செய்தும் ப்ளூ சட்டை மாறன்களைத் திட்டிக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.