வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : செவ்வாய், 16 அக்டோபர் 2018 (21:24 IST)

சண்டைக்கோழி இத்தனை திரையரங்குகளில் வெளிவருகிறதா?

சண்டக்கோழி 2 திரைப்படம் வரும் அக்டோபர் 18 ஆம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகிறது இந்தப் படத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், வரலட்சுமி உள்பட பலர் நடித்துள்ளனர். 
 
லிங்குசாமி இந்த படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் சிறப்பாக உள்ளன. படத்தின் டிரெய்லர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை உருவாக்கி உள்ளது. 
 
இந்நிலையில் சண்டக்கோழி 2 திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. மொத்தம் ஆயிரம் திரை அரங்குகளில் படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஷால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்கள்.