புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 15 அக்டோபர் 2018 (18:41 IST)

10 தியேட்டர்களுக்கு ஆப்பு வைத்த விஷால்: திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் உள்ள ஒன்பது தியேட்டர்கள் மற்றும் பெங்களூரில் உள்ள ஒரு தியேட்டர் என மொத்தம் பத்து தியேட்டர்களுக்கு இனி எந்த படமும் வழங்கப்பட மாட்டாது என தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவை எடுத்துள்ளது

1. கிருஷ்ணகிரி முருகன் .. மனுசனா நீ

2. கிருஷ்ணகிரி நயன்தாரா .. கோலிசோடா டூ

3. மயிலாடுதுறை கோமதி .. ஒரு குப்பைக் கதை

4. கரூர் எல்லோரா .. ஒரு குப்பைக் கதை

5. ஆரணி சேத்பட் பத்மாவதி .. மிஸ்டர் சந்திரமௌலி

6. கரூர் கவிதாலயா .. தொட்ரா

7. கரூர் கவிதாலயா .. ராஜா ரங்குஸ்கி

8. பெங்களூரு சத்யம் .. இமைக்கா நொடிகள்

9. விருத்தாசலம்  ஜெய் சாய் கிருஷ்ணா தியேட்டர் .. சீமராஜா

10. மங்களூர் சினிபொலிஸ் .. சீமராஜா

மேற்கண்ட பத்து தியேட்டர்களில் பைரசிக்கு உதவும் வகையில் திருட்டுத்தனமாக புதிய திரைப்படங்களை வீடியோ எடுத்தது உறுதி செய்யப்பட்டிருப்பதால் வரும் ஆயுதபூஜை திருநாளில் வெளியாகும் படங்கள் உள்பட இனி எந்த படமும் மேற்கண்ட பத்து திரையரங்குகளுக்கு வழங்கப்பட மாட்டாது என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் மேற்கண்ட பத்து திரையரங்குகளின் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.