மருத்துவமனை வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்த விஷால்!
அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் விஷால்.
நடிகரும், நடிகர் சங்க பொதுச் செயலாளருமான நடிகர் விஷால்,டெல்லியில் சண்டைகோழி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும். பின்பு மேல்சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டதாக வதந்திகள் பரவியது.
இந்நிலையில் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் , நான் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டதாக வதந்திகள் வெளியாகின. தன் உடல்நலம் ஆரோக்கியத்துடன் உள்ளதாக தனது நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் தெரிவித்துள்ளார். சில நாட்கள் தலைவலிக்காக ஓய்வு எடுக்க சென்றுள்ளதாகவும். ஓய்வுக்குப் பிறகு மார்ச் முதல் வாரத்தில் மீண்டும் திரும்புவேன் என்றும் பதிவிட்டுள்ளார்.