நான் விஜய்யைக் காப்பி அடிக்கவில்லை… சைக்கிளில் சென்றது ஏன்?- விஷால் சொன்ன அடடே பதில்!
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி காலை நடைபெற்ற நிலையில் வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். இதில் பிரபல நடிகர்கள் வாக்களிக்க சென்றது இணையத்திலும் ஊடகங்களிலும் கவனம் பெற்றது.
ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என பிரபல நடிகர்கள் வாக்களித்த நிலையில் நடிகர் விஷால் வாக்களிக்க சென்றது இணையத்தில் வைரலானாது. அவர் சைக்கிளில் சென்று வாக்களித்தார். அதுமட்டுமில்லாமல் அதை வீடியோவாகவும் எடுத்து இணையத்தில் பரப்பினார். நடிகர் விஜய் கடந்த தேர்தலில் சைக்கிளில் சென்று வாக்களித்த நிலையில் இந்த தேர்தலில் நடிகர் விஷால் அவரை காப்பியடித்து இதுபோல கவன ஈர்ப்பை கோருவதாக நடந்துகொள்கிறார் என்று அவர் மேல் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இப்போது அதற்கு பதிலளித்துள்ளார் விஷால். அதில் “நான் விஜய்யைக் காப்பி அடிக்க அப்படி செய்யவில்லை. என்னிடம் வேறு வாகனங்கள் இல்லை. அதனால் சைக்கிளில் சென்றேன். என்னிடம் இருந்த வாகனங்களை எல்லாம் விற்றுவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.