செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : சனி, 17 மார்ச் 2018 (15:03 IST)

அஜித்துக்கு ‘ஆப்பு’ வைத்த விஷால்

23ஆம் தேதி முதல் வெளிமாநிலங்களிலும் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என உத்தரவு போட்டு அஜித்துக்கு ‘ஆப்பு’ வைத்துள்ளார் விஷால்.


 
அஜித் நடிப்பில் சிவா இயக்க இருக்கும் படம் ‘விஸ்வாசம்’. நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு என 3 காமெடியன்கள் நடிக்கின்றனர். ‘விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. இதன்மூலம் முதன்முறையாக அஜித் படத்துக்கு இசையமைக்கிறார் டி.இமான்.

இந்தப் படத்தின் ஷூட்டிங், வருகிற 23ஆம் தேதி முதல் ஹைதராபாத்தில் தொடங்குவதாக இருந்தது. அங்குள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இதற்காக செட்டும் போடப்பட்டு வந்தது. இந்நிலையில், 23ஆம் தேதி முதல் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படும் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

விஷால் வேண்டுமென்றே அஜித்துக்கு ‘ஆப்பு’ வைத்ததாகக் கருதுகிறார்கள் சினிமாத்துறையில் இருக்கும் சிலர். காரணம், நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் இரண்டிலுமே பதவியில் இருக்கிறார் விஷால். அஜித், நடிகர் சங்கத்தை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. நடிகர் சங்கத் தேர்தல், கட்டிடம் கட்ட பூஜை என எதிலுமே பங்கேற்பதில்லை. சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திரக் கலைவிழாவில் கூட கலந்து கொள்ளவில்லை. எனவே, அவரைப் பழிவாங்கத்தான் விஷால் இந்த முடிவை எடுத்ததாகச் சொல்கிறார்கள்.