புதன், 18 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 24 ஆகஸ்ட் 2019 (17:19 IST)

சமூக வலைதளங்களில் வைரலான பெண்ணுக்கு சினிமாவில் வாய்ப்பு!

மும்பையைச் சேர்ந்த ரேணு மண்டல் என்ற பெண், ரயில்வே நிலையத்தில் நின்று, பாலிவுட்டில் பிரபல பாடகியான லதா மங்கேஷ்கரின் பிரபல பாடலான ’ஏக் பியார் நக்மாஅ ஹோய் ‘ என்ற பாடலை பாடினார். இதைக் கேட்ட மக்கள் இவரது பாடலை ரசித்து அதை வீடியோவாக பதிவிட்டு இணையதளத்தில் வெளியிட்டனர். இது வைரலானது.
இந்நிலையில் ரேணு மண்டலின் குரலைக் கேட்ட பாலிவுட் இசையமைப்பாளரும் நடிகருமான ஹிமேஷ் ரேஷ்மியா தனது அடுத்த படமான 'ஹேப்பி ஹர்டி அண்ட் ஹீர் ' (Happy Hardy and Heer) என்ற படத்தில் ரேணு மண்டலுக்கு வாய்ப்பளித்துள்ளார்.
இதுகுறித்து ஹிமேஷ் ரேஷ்மியா கூறியுள்ளதாவது:
 
ரேணுவை பார்த்த போது அவரது குரலில் ஒரு தெய்வீகதன்மையை  உணர்தேன். யாரிடம் திறமை இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவி வருகிறேன். ரேணுவில் குரலை அனைவரையும் கேட்கச் செய்வதே  என் இலக்கு என்று தெரிவித்துள்ளார்.