வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 27 ஜனவரி 2024 (11:43 IST)

எனக்கு விஜய் அண்ணாதான் கோச்… மேடையில் விக்ராந்த் பேச்சு!

ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்திலும் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ள லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். பிப்ரவரி 9 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளது. படம் கிரிக்கெட்டையும் மத நல்லிணக்கத்தையும் பற்றி பேசும் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்நிலையில் நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

அப்போது படத்தின் கதாநாயகர்களான விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய இருவரும் மேடையேறினர். அப்போது அவர்களிடம் உங்களுக்கு கிரிக்கெட் கோச்சாக யாரை தேர்ந்தெடுப்பீர்கள் எனக் கேட்கப்பட்டது. முதலில் இதற்கு பதிலளித்த விஷ்ணு விஷால் “எனக்கு அஜித் சார்தான் கோச்சாக வரவேண்டும். அவர்தான் டீசண்டாக திட்டுவார்” எனக் கூறியுள்ளார்.

அடுத்து இதேக் கேள்விக்கு பதிலளித்த விக்ராந்த் “எனக்கு கோச்சாக விஜய் அண்ணாதான் வரவேண்டும்” எனக் கூறினார்.  அடுத்தடுத்து விஜய், அஜித் பேரை இருவரும் சொன்னதால் அரங்கமே அதிர ரசிகர்கள் கோஷம் எழுப்பினர்.