செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 24 ஆகஸ்ட் 2022 (10:03 IST)

கேஜிஎப்-ல் யாஷுக்கு பதில் நான் நடித்திருக்கணும்…. விக்ரம்மின் ஆசைக்கு ஸ்ரீநிதி ஷெட்டியின் பதில்!

நடிகர் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

நடிகர் விக்ரம் நடித்த ’கோப்ரா’ என்ற திரைப்படம் வரும் 31ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளுக்காக நடிகர் விக்ரம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

முதல் கட்டமாக சில நாட்களுக்கு முன்னர் அவர் திருச்சியில் மாணவர்களுடன் ஒரு விழாவில் கலந்து கொண்டார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த விக்ரமை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சூழ்ந்து இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய விக்ரம் “இந்த படத்தில் ஸ்ரீநிதி நடித்துள்ளார். திறமையான,  கடின உழைப்பைக் கொடுக்கும் நடிகை. அவர் நடித்த கே ஜி எஃப் பார்த்தேன். அவரிடம் நான் கேஜிஎஃப் படத்தில் யாஷுக்குப் பதில் நான் நடித்திருக்க வேண்டும் எனக் கூறினேன். அதற்கு அவர் நான் சிறுவயதில் அந்நியன் பார்த்தேன். அதில் சதாவுக்கு பதில் நான் நடித்திருக்க வேண்டும் “ எனக் கூறினார்.