1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (09:13 IST)

கோப்ரா படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக படப்பிடிப்பு நடந்துவந்த  ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் முடிவுற்றது. பின் தயாரிப்பு பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பின்னர் தேதி ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள் வெளியாகி உள்ளன. ‘கோப்ரா’ படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்தப் படத்திற்கு யூஏ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 55 நிமிடங்கள் என உள்ளன.

இதையடுத்து படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் எனக் காத்திருந்த ரசிகர்களுக்கு ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.