புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 24 ஆகஸ்ட் 2022 (14:53 IST)

மதுரையில் கோப்ரா ப்ரமோஷன்… இயக்குனர் பாலா பற்றி பேசிய விக்ரம்!

நடிகர் விக்ரம் கோப்ரா படத்தின் பரமோஷன் பணிகளுக்காக தற்போது மதுரைக்கு சென்றுள்ளார்.

நடிகர் விக்ரம் நடித்த ’கோப்ரா’ என்ற திரைப்படம் வரும் 31ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளுக்காக நடிகர் விக்ரம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். சமீபத்தில் திருச்சியில் ரசிகர்களை சந்தித்த அவர் தற்போது மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது மாணவர்களிடம் “மதுரை வந்தாலே மீசை முறுக்க தோன்றுகிறது. உங்கள் அன்புதான் அதற்கெல்லாம் காரணம். என் தந்தை இந்த கல்லூரியில்தான் படித்தார். என் நண்பர்கள் பாலா, அமீர் எல்லாம் இங்குதான் இருந்தார்கள்.” என்று ஜாலியாக பேசினார்.

வர்மா திரைப்பட உருவாக்கத்தின் போது இயக்குனர் பாலாவுக்கும் நடிகர் விக்ரம்முக்கும் இடையே பிரச்சனை உருவானது. அதனால் பாலா இயக்கிய திரைப்படம் கிடப்பில் போடப்பட்டது. இந்த பிரச்சனைக்குப் பிறகு விக்ரம், இயக்குனர் பாலாவை தன்னுடைய நண்பன் என பேசி இருப்பது ரசிகர்களை நெகிழச் செய்துள்ளது.