அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட கூடாது: சவுக்கு சங்கருக்கு தடை
அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிடக் கூடாது என சவுக்கு சங்கருக்கு உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பத்திரிக்கையாளர் மற்றும் ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் அவ்வப்போது யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து வருகிறார். அந்த பேட்டியில் அவர் அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கருக்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளார். தன் மீது அவதூறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார்
இதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இந்த வழக்கில் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதன்படி செந்தில் பாலாஜிக்கு எதிராக அவதூறு கருத்துக்களை சவுக்கு சங்கர் பதிவு செய்யக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.