திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 8 நவம்பர் 2024 (15:25 IST)

‘பச்சை துரோகி… என் எதிரிக்குக் கைக்கூலியாக செயல்பட்டிருக்கிறான்’- மதயானைக் கூட்டம் இயக்குனர் ஆவேசப் பதிவு!

மதயானைக் கூட்டம் திரைப்படம் வெளியாகி 8 ஆண்டுகளுக்குப் பிறகே இயக்குனர் விக்ரம் சுகுமாரன் தனது அடுத்த படமான 'இராவண கோட்டம்' படத்தை சாந்தணுவை வைத்து இயக்கினார். அந்த படம் பெரியளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால் விக்ரம் சுகுமாரன் அடுத்த படம் இயக்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் வளர்த்து உருவாக்கிய நடிகர் ஒருவரே தன்னுடைய வாய்ப்புகளைப் பறிப்பதாக அவர் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் “மதயானைக் கூட்டம் படத்துக்குப் பிறகு எனக்கு வேறு பட வாய்ப்புகள் வரவில்லை. நானும் யாரும் அழைக்கவில்லை என்றுதான் நினைத்தேன். ஆனால் எனக்கு வந்த வாய்ப்புகளை எல்லாம் ஒருவன் தடுத்து நிறுத்தியிருக்கிறான் என்பது இன்றுதான் தெரிந்தது. அவன் வேறு யாரும் இல்லை. அவனை நான்தான் நடிகன் ஆக்கினேன்.

பச்சை துரோகி… என் எதிரிக்குக் கைக்கூலியாக செயல்பட்டிருக்கிறான். இதைக் கேட்டதில் இருந்து ஆண்டவன் மீதுதான் ஆத்திரம் வருகிறது. ஆத்திரப்பட்டு ஒன்றும் ஆகப்போவது இல்லை.” என ஆதங்கமாகப் பதிவு செய்துள்ளார். ஆனால் தனது வாய்ப்பைக் கெடுத்த நடிகர் யார் என்பது குறித்து அவர் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.