1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 31 ஜனவரி 2024 (13:55 IST)

'ப்ளூ ஸ்டார்' படம் வெற்றி குறித்து நடிகர் சாந்தனு உருக்கம்!

sandhanu -bhakiyaraj
தமிழ் சினிமாவின்  இளம் நடிகர் சாந்தனு. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ப்ளூ ஸ்டார் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள  நிலையில், தன் தந்தையுடன் அவர் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து  ஒரு நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

அசோக் செல்வன் மற்றும் சாந்தனு உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவான படம் ப்ளூ ஸ்டார்.

இந்த படத்தில் இவர்களுடன் இணைந்து,   கீர்த்தி பாண்டியன், பகவதி பெருமாள், குமரவேல் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

ஜெயகுமார் இயக்கிய இப்படத்தை பா. ரஞ்சித் தயாரித்திருந்தார். இப்படம் கடந்த 25 ஆம் தேதி வெளியானது.

இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள நிலையில்  ரசிகர்கள் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் ப்ளூஸ்டார் படம் வெற்றியடைந்துள்ள நிலையில், இந்த  வெற்றியை படக்குழுவினர் நேற்று உற்சாகமாக  கொண்டாடினர்.

இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இதுகுறித்து நடிகர் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு இருவரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று நடிகர் சாந்தனு, ''என் முதல் ஹீரோ என் அப்பா என்னுடைய தந்தையை மனதார புன்னகைக்க வைத்த மக்களே. ப்ளூ ஸ்டார் திரைப்படத்திற்கு நீங்கள் அளித்த வரவேற்பும் ஆதரவும்தான் இதனை சாத்தியமாக்கியது. இதற்கு நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்! ''என்று உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.