1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (13:17 IST)

சிவகார்த்திகேயன் – சூர்யா இருவரில் யாருடன் மோதப்போகிறார் விக்ரம்?

சிவகார்த்திகேயன் – சூர்யா இருவரில் யாருடன் மோதப்போகிறார் விக்ரம் என்ற கேள்வி எழுந்துள்ளது.


 

 
விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘ஸ்கெட்ச்’. வடசென்னையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், தமன்னா ஹீரோயினாக நடித்துள்ளார். ஸ்ரீபிரியங்கா இன்னொரு ஹீரோயினாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என தகவல் பரவியது. ஆனால், இயக்குநர் அதை மறுத்தார். எனவே, விஜய்யுடன் போட்டிபோடும் வாய்ப்பில் இருந்து தப்பினார் விக்ரம். எனவே, தீபாவளிக்குப் பிறகு கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் என இரண்டு விடுமுறை தினங்கள் உள்ளன.

கிறிஸ்துமஸுக்கு சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘வேலைக்காரன்’ படமும், பொங்கலுக்கு சூர்யா நடித்துள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் ரிலீஸாகின்றன. இதில், யாருடன் மோதப்போகிறார் விக்ரம் என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது.