1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (16:57 IST)

ஜெயலலிதா பயோபிக்: சசிகலாவாக நடிக்கும் நடிகை இவர்தான்...

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவில் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் வெப் சீரிஸாக உருவாகி வருகிறது. 
 
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரியஸாக எடுத்து வருகிறார் இயக்குநர் கவுதம் மேனன். இதில் ஜெயலலிதாவாக ரம்யாகிருஷ்ணன், எம்.ஜி.ஆராக இந்திரஜித், சோபன் பாபுவாக வம்சி கிருஷ்ணா ஆகியோர் நடித்து வருகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
சுமார் 30 வாரங்கள் இந்த வெப் சீரியஸ் ஆக ஒளிப்பரப்பாகும் என தெரிகிறது. மேலும், இது குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. 
 
அந்த வகையில் தற்போதைய அப்டேட்டாக சசிகலாவின் ரோலில் விஜி சந்திரசேகர் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. விஜி தற்போது குணச்சித்திர நடிகையாக படங்களில் நடித்து வருகிறார்.