முன்கூட்டியே சசிகலா விடுதலையா? தமிழக அரசியலில் பரபரப்பு
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பார்ப்பன அக்ராஹர சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக சிறை விதிகளின்படி தண்டனை காலத்தில் எந்தவித தவறும் செய்யாமல் இருந்தால் நான்கில் மூன்று பங்கு தண்டனை அனுபவித்திருந்தால் நன்னடத்தை காரணமாக விடுதலையாகலாம். அந்த வகையில் கடந்த 2017ஆம் ஆண்டு நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்ற சசிகலா தற்போது இரண்டு ஆண்டுகள் தண்டனையை அனுபவித்துவிட்டார். இன்னும் இரண்டு ஆண்டுகள் தண்டனை இருந்தாலும் நன்னடத்தை விதியின்படி இன்னும் ஒரே ஆண்டில் அதாவது 2010ஆம் ஆண்டு பிப்ரவரியில் அவர் விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னரே சசிகலா விடுதலையானால் தமிழக அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.