ஜெயலலிதா பிறந்தநாளுக்கு பேனர்கள் வைக்க ஐகோர்ட் தடை

VM| Last Updated: புதன், 13 பிப்ரவரி 2019 (18:17 IST)
ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு பேனர்கள் வைக்க அனுமதி அளிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.


 
விதிமீறி சாலைகளில் பேனர்கள் வைக்கப்படுவதுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது தொடர்பான  வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வரும் 24-ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு பேனர்கள் வைக்க அனுமதி கோரி அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. பாலகங்கா சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
 
ஆனால்  அதனை நிராகரித்த நீதிபதிகள் நீதிமன்ற உத்தரவின் மாண்பு காக்கப்பட வேண்டும் என்றனர். அப்போது தமிழகம் முழுவதும் சட்டவிரோத பேனர்களை அகற்றுவது தொடர்பாக அறிக்கையை அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
 
சட்டவிரோத பேனர்களை அகற்றுவது மட்டுமன்றி தடுப்பதும் அரசின் கடமை என்ற நீதிபதிகள், கூறினர். மேலும் அதிமுக பேனர்களுக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று வருத்தம் என்றும் வருத்தம் தெரிவித்தனர். அரசின் அறிக்கை திருப்திகரமாக இல்லை என்று கூறிய நீதிபதிகள், புதிதாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும்  உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :