ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 27 மே 2023 (20:16 IST)

விஜய்சேதுபதி நடித்த இந்திப் படம் ஓடிடியில் ரிலீஸ்

vijay sethupathy
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய்சேதுபதி, இந்தியில் இவர் நடித்த முதல் படம் ஓடிடியில் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்சேதுபதி. இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில்,  சில ஆண்டுகளுக்கு முன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் என்ற படம் இந்தியில் மும்பைக்கார் என்ற பெயரில்  ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

இப்படத்தை  இயக்குனர் சந்தோஷ் சிவன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு யு/ஏ  தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், இப்படம் ஓடிடி பிளாட்பார்மில் வரும் ஜூன் 2 ஆம்தேதி  வெளியிடப்படவுள்ளது.

தமிழ் மற்றும் இந்தியில் வெளியாகவுள்ள இப்படத்தில் டிரெயிலர் இன்று வெளியாகியுள்ளது.