புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 6 டிசம்பர் 2018 (20:59 IST)

சினிமா அரசியல் பேசணும், அதுல தப்பில்ல..: விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி தற்போது சீதகாதி என்ற படத்தில் 75 வயது தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள், டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. 
இந்நிலையில் விஜய் சேதுபதியிடம் சமீபத்திய பேட்டியில் அரசியல் பேசும் திரைப்படங்கள் அதிகரிக்கின்றன. உங்கள் படங்களிலும் அரசியல் இருக்குமா? என்ற கேள்விக்கு பின்வருமாறு பதில் அளித்துள்ளார். 
 
இங்கே எல்லாமே அரசியல்தான். டிவி, மிக்சியைப் பற்றி மட்டும் பேசுவது அரசியல் இல்லை. ஒரு சாதியை தூக்கிப்பேசுவது, இன்னொரு சாதியை இழிவுபடுத்துவது எல்லாமே அரசியல்தான்.
 
சினிமாக்கள் அரசியல் பேசணும். மக்களுக்கு வி‌ஷயங்கள் போய் சேரணும். சென்சார் முடிந்து வரும் படங்களை மிரட்டுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. 
 
சினிமாக்காரங்களுக்கு குளிர்விட்டு போயிடுச்சுன்னு சொல்றாங்க. உங்களை ஓட்டு போட்டு உட்கார வெச்சுருக்கோம். எங்களை மிரட்டுறது உங்கள் வேலையே கிடையாது. 
 
எங்களுடைய கருத்து தவறா இருந்தா அதை எதிர்த்து கேள்வி கேட்கலாம். ஆனால், மிரட்டுவது மிகவும் தவறு என தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.