விஜய் சேதுபதியின் அடுத்த படத்தை இயக்கவுள்ள ராம்கோபால் வர்மா?
விஜய் சேதுபதியின் 50 ஆவது படமான மகாராஜா கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வெற்றிகரமாக ஓடிவருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருக்கு ஒரு ஹிட் படமாக அமைந்துள்ளது மகாராஜா. அவர் கதாநாயகனாக நடித்தால் இனிமேல் படமே ஓடாது என்கிற பேச்சுகளுக்கு எல்லாம் பதில் சொல்லும் விதமாக மகாராஜா பேய் ஹிட் ஆகியுள்ளது.
இதையடுத்து இனிமேல் வில்லன் மற்றும் கௌரவ வேடங்களில் நான் நடிக்கப் போவதில்லை என அவர் ஓப்பனாக அறிவித்துள்ளார். அடுத்து கதாநாயகனாக மட்டுமே படங்களில் நடிக்கும் முடிவில் இருக்கும் அவர் அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.
மேலும் அடுத்து அவர் நடிக்கவுள்ள படத்தை இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.