1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 22 ஜூன் 2024 (08:45 IST)

ஹிட் கொடுத்த பின்னர் அதிரடியாக சம்பளத்தைக் குறைத்த விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதியின் 50 ஆவது படமான மகாராஜா கடந்த வாரம் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வெற்றிகரமாக ஓடிவருகிறது.  நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருக்கு ஒரு ஹிட் படமாக அமைந்துள்ளது மகாராஜா. அவர் கதாநாயகனாக நடித்தால் இனிமேல் படமே ஓடாது என்கிற பேச்சுகளுக்கு எல்லாம் பதில் சொல்லும் விதமாக மகாராஜா பேய் ஹிட் ஆகியுள்ளது.

இதையடுத்து இனிமேல் வில்லன் மற்றும் கௌரவ வேடங்களில் நான் நடிக்கப் போவதில்லை என அவர் ஓப்பனாக அறிவித்துள்ளார். அடுத்து கதாநாயகனாக மட்டுமே படங்களில் நடிக்கும் முடிவில் இருக்கும் அவர் அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்துக்கு தான் வாங்கும் சம்பளத்தை விட குறைவான சம்பளத்தையே அவர் பெறவுள்ளாராம். ஒரு ஹிட் கொடுத்த பின்னர் வழக்கமாக ஹீரோக்கள் சம்பளத்தை ஏற்றும் வழக்கத்துக்கு மாறாக விஜய் சேதுபதி தன்னுடைய சம்பளத்தைக் குறைத்துக் கொண்டது ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது.