பணப்பிரச்சனையில் தவிக்கும் விஜய்சேதுபதி படம் - ஒரு கோடி கொடுத்து உதவிய பிரபலம்!

Last Updated: வியாழன், 27 ஜூன் 2019 (19:16 IST)
விஜய் சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி' ஆகிய படங்களை இயக்கிய அருண் குமார், மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து சிந்துபாத் என்ற படத்தை இயக்கியுள்ளார்.


 
இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். இப்படத்தை ராஜராஜன் மற்றும் ஷான் சுதர்சன் தயாரித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விமர்சகர்கள் தரப்பிலிருந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் சிந்துபாத் படம் ரசிகர்கள் மனதை வெல்ல வில்லை மாறாக கலவையான விமர்சனகளை பெற்று வருகிறது. 
 
பணப்பிரச்சனை காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிபோனது. கடந்த வாரமே வெளியாகவேண்டிய இப்படம் இந்த வாரம் தான் வெளியாகியுள்ளது. சமீபகாலமாகவே தன்னுடைய படங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் சந்திக்கும் பண பிரச்சனையால் விஜய் சேதுபதி தன்னுடை சம்பள பணத்தில் சில தொகையை கொடுத்து உதவி செய்து அதனை ஈடுகட்டி வருகிறார். 


 
அதே பிரச்சனை தற்போது மீண்டும் சிந்துபாத் படத்திற்கு வந்துள்ளது. இந்தமுறை படத்தின் ஹீரோ விஜய் சேதுபதியையும் தாண்டி இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் இப்படத்திற்காக 1 கோடி ரூபாயை கொடுத்து உதவியுள்ளாராம். 


இதில் மேலும் படிக்கவும் :