திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 29 ஜூலை 2022 (15:43 IST)

ஓடிடியில் வெளியானது விஜய் சேதுபதியின் மலையாள திரைப்படம்

விஜய் சேதுபதி முதல் முதலாக மலையாளத்தில் நடித்துள்ள 19 (1) (a) என்ற திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

தமிழ் மொழிப் படங்களில் பிரதானமாக நடித்து வந்தாலும் நட்பின் அடிப்படையில் தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களிலும் அவ்வப்போது நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. சைரா நரசிம்மா ரெட்டி மற்றும் மார்க்கோனி மாத்தாய் ஆகிய படங்களே இதற்கு உதாரணம்.

இந்நிலையில் இப்போது மேலும் ஒரு மலையாளப்படத்தில் நடிகை நித்யா மேனனுடன் நடித்துள்ளார். இந்த படத்துக்கு 19 1 a என வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் திரையரங்க வெளியீடாக இல்லாமல் நேரடி ஓடிடி வெளியீடாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் தற்போது ஸ்ட்ரீம் ஆகியுள்ளது.