1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 24 டிசம்பர் 2017 (15:50 IST)

விஜய் சேதுபதியா இப்படி செய்தது? கோலிவுட்டில் பரபரப்பு....

கோலிவுட்டில் பரபரப்பு என்றவுடன் நீங்களும் பரபரப்படைய வேண்டாம். விஜய் சேதுபதி செய்த செயல் ஒன்று அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான் கோலிவுட்டில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.  
 
விஜய் சேதுபதி மீது அவர் செய்யும் சில காரியங்களினால் மதிப்பு அதிகரித்து வருகின்றது. அதோடு அவரின் நடிப்பில் வெளியாகும் படங்களும் வெற்றி பெறுவதால், அனைவரும் அழைப்பது போல மக்கள் செல்வனாகவே வலம் வருகிறார். 
 
சமீபத்தில் சர்வதேச திரைப்பட விழா சென்னையில் நடந்தது. இதில் சிறந்த படமாக ஒரு கிடாயின் கருணை மனு தேர்வானது. விஜய் சேதுபது நடித்த விக்ரம் வேதா இரண்டாவது சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. 
 
மாநகரம் படத்திற்கு சிறப்பு ஜூரி விருது கிடைத்தது. அதோடு விஜய் சேதுபதிக்கு அமிதாப்பச்சன் யூத் ஐக்கான் விருது வழங்கப்பட்டது. அதனுடன் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகை கொடுக்கப்பட்டது. 
 
பரிசுத்தொகையை வாங்கிய கையோடு அதே மேடையில் அதை இந்தோ சினி அப்ரிஷியேசன்ஸ் அமைப்புக்கே நன்கொடையாக கொடுத்துவிட்டார். இந்த நிகழ்வால் அவர் மீதான மதிப்பு மேலும் உயர்ந்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.