1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Abi)
Last Updated : புதன், 16 ஆகஸ்ட் 2017 (19:09 IST)

இன்ஸ்டாகிராமில் நுழைந்த விஜய் சேதுபதி

சமூக வலைதளங்கள் எதிலும் இல்லாத விஜய் சேதுபதி, முதன்முறையாக இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார்.


 

 
ஒருகாலத்தில் தங்களைப் பற்றிய செய்திகளை ரசிகர்களுக்குத் தெரிவிக்க, மீடியாக்களை மட்டுமே நம்பியிருந்தனர் சினிமாக்காரர்கள். ஆனால், ஆர்குட், ஃபேஸ்புக், டுவிட்டர் என சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்த பிறகு, நேரடியாக அதிலேயே சொல்ல வந்ததைப் பதிவிட்டு செல்கின்றனர்.
 
அதிலும், டுவிட்டரைத்தான் சினிமாக்காரர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இன்ஸ்டாகிராமின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பல பிரபலங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதியும் இன்ஸ்டாவில் இணைந்துள்ளார். ஆனால், அவருக்கு ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் அக்கவுண்ட் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.