வியாழன், 30 நவம்பர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 25 நவம்பர் 2022 (21:45 IST)

விஜய் சேதுபதியின் ''டிஎஸ்பி'' பட டிரைலர் ரிலீஸ்!

vijay sethupathy
விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள டிஎஸ்பி படத்தின் டிரைலர் ரிலீஸாகியுள்ளது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் இமான் இசையில் உருவான திரைப்படம் டிஎஸ்பி.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் டிசம்பர் இரண்டாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

இந்த படத்திற்கு சமீபத்தில் சென்சார் அதிகாரிகள் யுஏ சான்றிதழ்  வழங்கினர்.
இன்று, நடைபெற்ற இப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில், கமல்ஹாசன், இயக்குனர் மிஸ்கின் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் டிரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது. இதில், திண்டுக்கல் மாவட்டத்தில் நடக்கும் கதையாக உள்ளதாகவும், போலீஸ் வேடத்தில் நடித்துள்ளதால், அதிரடி ஆக்சன் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. எந்த ஊரில் உன்னை ஓடி ஒளிய விட்டார்களோ அந்த ஊரில் ஒரு ரவுடிகள் கூற இருக்கக்கூடாது என  இளவரசு பேசும் வசனங்களும் மிளிர வைக்கிறது.

இந்த டிரைலர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதி ஜோடியாக நடித்துள்ள இந்த திரைப்படத்தில் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்பந்தன், தீபா, சிங்கம்புலி உள்பட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj