1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 11 மே 2024 (08:01 IST)

லாஸ் ஏஞ்சலஸ் திரைப்பட விழாவில் தேர்வாகியுள்ள விஜய் சேதுபதியின் 50 ஆவது படம்!

விதார்த், பாரதிராஜா ஆகியோர் நடிப்பில் உருவான குரங்கு பொம்மை படத்தை இயக்கியவர் நித்திலன். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்து அவர் விஜய் சேதுபதி நடிக்கும் மகாராஜா இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு மத்தியில் தொடங்கி இறுதியில் முடிவடைந்தது. இது விஜய் சேதுபதியின் 50 ஆவது படமாக உருவாகி வருகிறது.

இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் நட்டி மற்றும் பாய்ஸ் மணிகண்டன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.  படத்துக்கு ஆகானாஷ் லோக்நாத் இசையமைக்கிறார். இந்த படம் ஒரு ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது. ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் முடிந்தாலும் இந்த படம் ரிலீஸாகாமல் முடங்கிக் கிடந்தது. இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமை விற்பனை ஆகாமல் இருப்பதே ரிலீஸ் தாமதத்துக்குக் காரணம் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடக்க உள்ள இந்தியன் பிலிம்ஸ் பெஸ்டிவலின் கடைசி நாளில் திரையிட மகாராஜா திரைப்படம் தேர்வாகியுள்ளது. இந்த திரைப்படவிழா ஜூன் 27 ஆம் தேதி 30 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது. அதனால் இந்த திரைப்படம் ஜூலை மாதம்தான் ரிலீஸாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.