புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: வியாழன், 25 ஏப்ரல் 2024 (20:55 IST)

மரணமடைந்த தன் ரசிகருக்காக நேரில் சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!!

சென்னை MGR நகர் ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தின் தலைவராக இருந்த, சென்னை கே கே நகர் பகுதியைச் சேர்ந்தவர் தான் இளைஞர் ராஜா (வயது 33). அவர் சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமானார். 
 
ஜெயம் ரவி மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவரான  ராஜா, ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல நற்பணிகள் செய்து வந்தார். 
 
தனது ரசிகனின் திடீர் மரணத்தை அறிந்த ஜெயம் ரவி, ராஜாவின் வீட்டுக்குச் சென்று, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
 
 மேலும் அவரின் குடும்பத்திற்கு எந்த உதவியானாலும் தான் முன் நின்று செய்து தருவதாக உறுதியளித்தார்.