ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : சனி, 27 ஏப்ரல் 2024 (13:05 IST)

வித்தியாசமான உடையில் ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

தமிழ் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஸ்ருதிஹாசனை தெலுங்கு சினிமாவே மிகப்பெரிய ஸ்டார் நடிகை ஆக்கியது. தெலுங்கில் அறிமுகம் ஆனதில் இருந்தே நிறைய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடித்தார்.

ஸ்ருதி நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ்ப்படம் லாபம். கடந்த ஆண்டு ரிலீஸ் ஆனது. இதையடுத்து தற்போது அவர் ‘யாமிருக்க பயமே’ மற்றும் கவலை வேண்டாம் படத்தின் இயக்குனர் DK இயக்கத்தில் உருவாகும் ஒரு த்ரில்லர் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரி எண்ட்ரி கொடுக்க உள்ளார். விரைவில் இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் லோகேஷ் கனகராஜோடு இணைந்து இனிமேல் என்ற இசை ஆல்பத்தை உருவாக்கி வெளியிட்டார்.

அடுத்து லோகேஷ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தில் ஸ்ருதி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் வித்தியாசமான உடையணிந்து வெளியிட்டுள்ள போட்டோஷூட் ஆல்பம் இணையத்தில் வைரலாகி வருகிறது.