2 மாதங்களில் 4 படங்கள் ரிலீஸ்… வெள்ளிக்கிழமை ஹீரோ விஜய் சேதுபதி !
தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாகவே அதிக படங்களில் நடிக்கும் கதாநாயகனாக இருப்பவர் விஜய் சேதுபதி.
மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி பல இடங்களில் விஜய்யை விட அதிகமாக ஸ்கோர் செய்தார். இதனால் விஜய் ரசிகர்களே கூட விஜய் சேதுபதியின் புகழ்பாட தொடங்கினர். இந்நிலையில் தமிழைத் தவிர பல மொழிகளில் இருந்தும் விஜய் சேதுபதிக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் இப்போது தமிழிலேயே அவர் 10 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமிலலாமல் அவர் நடித்து முடித்து ரிலீஸுக்கு தயாராக பல படங்கள் உள்ளன.
இந்நிலையில் இப்போது ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டும் அவர் நடித்துள்ள நான்கு படங்கள் 15 நாட்கள் இடைவெளியில் வெளியாக உள்ளதாம். யாதும் ஊரே யாவரும் கேளிர், லாபம், மாமனிதன் உள்ளிட்ட படங்கள் அந்த பட்டியலில் உள்ளதாக சொல்லப்படுகிறது.