வியாழன், 12 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (21:07 IST)

விஜய்யின் The GOAT படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்?

GOAT
விஜயின் The GOAT படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும்  படம் The GOAT. இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, லைலா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இப்பட ஷூட்டிங் நடந்து வரும்  நிலையில் விஜயின் The GOAT படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
இப்படத்தின் ஷூட்டிங்  வரும் மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், இப்படம் வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளில் வெளியாகலாம் என தகவல் வெளியானது.
 
இந்த நிலையில், இப்படத்தை சுதந்திர தினத்தை முன்னிடு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
 
விஜய்யின் படம் அரசுவிடுமுறை நாளின்போது வெளியிட்டால் வசூல் சாதனை படைக்கும் என்பதால் படக்குழு இதுபற்றி யோசித்து வருவதாக தகவல் வெளியாகிறது.
 
ஆனால், இந்த தேதியில் பான் இந்திய படங்கள் ரிலீஸாகும் பட்சத்தில் இந்த தேதியும் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.