திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: சனி, 5 செப்டம்பர் 2020 (14:40 IST)

கிழித்தெறியப்பட்ட விஜய் போஸ்டர்கள்: ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு

கிழித்தெறியப்பட்ட விஜய் போஸ்டர்கள்: ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு
தளபதி விஜயின் ரசிகர்கள் கடந்த சில நாட்களாக எம்ஜிஆரை உருவகப்படுத்தி விஜய்யின் போஸ்டர்களை நகர் முழுவதும் ஒட்டி வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதலில் மதுரையில் ஆரம்பித்த இந்த போஸ்டர் கலாச்சாரம் அதன்பின் தேனி திண்டுக்கல் காஞ்சிபுரம் என தமிழகம் முழுவதும் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
எம்ஜிஆரை உருவகப்படுத்தி விஜய் போஸ்டர் ஒட்டப்பட்டதற்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் எம்ஜிஆரை போல் நடிகர் விஜய்யை உருவகப்படுத்தி ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் திடீரென கிழிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் அனுமதி இன்றி சுவரொட்டி ஒட்டியதாக விஜய் ரசிகர்கள் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வெளி வந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
’எம்ஜிஆரின் மறு உருவமே’ ’மாஸ்டர் வாத்தியாரே’ ’தமிழகம் தலைமை ஏற்க அழைக்கிறது’ போன்ற வசனங்களும் கூடிய விஜய்யின் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ‘மெர்சல்’ படத்தின் ரிலீசின்போது விஜய் போஸ்டர்களை அதிமுகவினர் கிழித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது