விஜய்க்காக சிறப்பு காட்சி திரையிடப்படும் ‘டாக்டர்’ படம்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த டாக்டர் திரைப்படத்தின் ஸ்பெஷல் காட்சியை விஜய்க்காக திரையிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன் தான், தளபதி விஜய்யின் அடுத்த படத்தை இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது டாக்டர் படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் திரைக்கு தயாராகிவிடும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் போஸ்ட் புரோடக்ஷன் பணி முடிந்தவுடன் விஜய்க்காக ஸ்பெஷல் காட்சி திரையிட நெல்சன் மற்றும் சிவகார்த்திகேயன் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது
விஜய்யும் இந்த படத்தை பார்ப்பதற்காக மிகுந்த ஆவலுடன் இருப்பதாகவும் தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும் இயக்குனரின் முந்தைய படம் எப்படி உள்ளது என்பதை அவர் தெரிந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது
எனவே சென்னையில் உள்ள பிரிவியூ தியேட்டரில் டாக்டர் படத்தை விஜய்க்காக சிறப்பு காட்சியை திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் விரைவில் இதுகுறித்த தேதி முடிவாகும் என்றும் கூறப்படுகிறது