1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 8 பிப்ரவரி 2021 (20:12 IST)

விஜய் ஆண்டனியின் அடுத்த படம் நிறைவு: கேக் வெட்டி கொண்டாட்டம்!

விஜய் ஆண்டனியின் அடுத்த படம் நிறைவு:
பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனியின் நடித்துவரும் திரைப்படங்களில் ஒன்று ‘கோடியில் ஒருவன். விஜய் ஆண்டனியின் 14வது திரைப்படமான இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது
 
விஜய் ஆண்டனி ஆத்மிகா உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது தெரிந்ததே. மேலும் இந்த படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் இன்றுடன் இந்த படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து விஜய் ஆண்டனி ஆத்மிகா மற்றும் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் உள்பட அனைவரும் கேக் வெட்டி படப்பிடிப்பு நிறைவைக் கொண்டாடினார்கள். இதுகுறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது