விஜய்யின் ‘கோட்’ திரைப்படம்: 4 நாட்கள் வசூல் எத்தனை கோடி?
தளபதி விஜய் நடித்த கோட் திரைப்படம் கடந்த ஐந்தாம் தேதி வெளியான நிலையில் இந்த படத்தின் முதல் நான்கு நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளன
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான கோட் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் 126.32 கோடி ரூபாய் என தயாரிப்பு நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் வியாழன் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய நான்கு நாட்களில் இந்த படம் வசூல் சாதனையை எட்டி இருக்கும் என்று கூறப்பட்டது. அதன்படி தற்போது உலகம் முழுவதும் இந்த படம் நான்கு நாட்களில் 250 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
இருப்பினும் இந்த படம் 500 கோடி ரூபாய் வசூலை எட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த படத்தின் பட்ஜெட் ரூபாய் 450 கோடி ரூபாய் என்று கூறப்பட்ட நிலையில் பட்ஜெட் பணமே இன்னும் வரவில்லை என்பது சோகத்திற்குரியதாக பார்க்கப்படுகிறது
Edited by Siva