1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 9 மே 2022 (19:12 IST)

வெளியானது ‘அரபிக்குத்து’ வீடியோ பாடல்: இணையத்தில் வைரல்

arabic
விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ‘அரபிக்குத்து’ பாடல் உலகம் முழுவதும் சூப்பர்ஹிட் ஆனது என்பதும் இந்த பாடல் பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய சாதனை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 இந்த நிலையில் ‘அரபிக்குத்து’ பாடலின் வீடியோவை சற்றுமுன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது 
 
விஜய் மற்றும் பூஜா ஹெக்டேவின் அபாரமான டான்ஸ் இந்த பாடலில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது