திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 9 மே 2022 (15:52 IST)

பழச மறந்து உறவாடிய சிவாகார்த்திகேயன் & அருண் விஜய்… இதுதான் காரணம்!

அருண் விஜய் சிவகார்த்திகேயன் இருவரும் கடந்த காலங்களில் சில கசப்பான மோதல்களை மேற்கொண்டு வந்தனர்.

சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தின் டிரைலர் வெளியான போது அருண் விஜய் அவரை சீண்டும் விதமாக ஒரு டிவீட்டைப் பகிர்ந்தார். அது அப்போது சர்ச்சைகளுக்கு ஆளானது. அதற்கு பதிலளிக்கும் விதமாக சிவகார்த்திகேயன் மிஸ்டர் லோக்கல் படத்தில் அருண் விஜய்யை சீண்டி ஒரு வசனம் பேசி இருந்தார். இப்படி இருவரும் மாறி மாறி உரசிக்கொண்டு இருந்தனர்.

இந்நிலையில் இப்போது அருண் விஜய்யின் மகன் ஆர்னவ்வின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகார்த்திகேயன் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக அருண் விஜய் “நன்றி சிவகார்த்திகேயன். கண்டிப்பாக உங்கள் வாழ்த்துகளை என் மகனிடம் சொல்லிவிடுகிறேன்” என மாறி மாறி அன்பைப் பொழிந்து வருகின்றனர்.