1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 10 நவம்பர் 2017 (22:18 IST)

நடன குழு சங்கத்திற்கு விஜய் நிதி உதவி!!

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளி விடுமுறைக்கு திரைக்கு வந்த படம் மெர்சல். 


 
 
மெர்சல் படத்தில் விஜய் பேசிய அரசியல் வசனங்களால் அரசியல் ரீதியாக விமர்சனங்களுக்கு உள்ளானது. ஆனால், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 
 
மெர்சல், தெலுங்கு டப்பிங்கில் அதிரிந்தி என வெளியானது. அங்கும் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என தக்வல் வெளியாகியுள்ளது. 
 
இந்நிலையில், கடந்த சில வருடங்களாக விஜய், தனது படம் ரிலீசாகும்போது, சினிமாவிலுள்ள ஏதாவது ஒரு சங்கத்துக்கு நிதி கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். 
 
பைரவா ரிலீசானபோதும் இதை செய்தார். தப்போது மெர்சல் ரிலீசையொட்டி டான்சர்ஸ் யூனியனுக்கு ரூ.15 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார்.