1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 30 ஜூன் 2023 (18:30 IST)

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை

Chiranjeevi
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை திரிஷா. இவர் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த நிலையில், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வந்த நிலையில், அவை கலவையான விமர்சனங்கள் பெற்றது.

பொன்னியின் செல்வன் படத்திற்குப் பின் அவர் மீண்டும் பிஸியாக நடித்து வருகிறார்.

தற்போது, விஜயுடன் இணைந்து லியோ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கவுள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் திரிஷா.

இதற்கு இருவரும் கடந்த 2006 ஆம் ஆண்டு ஸ்டாலின் என்ற படத்தில் நடித்திருந்தனர். இதனால்,  நீண்ட வருடத்திற்குப் பிறகு இருவரும் இணையும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  இப்படத்தை கல்யாண் கிருஷ்ணா இயக்கவுள்ளர். இப்படத்தை சிரஞ்சீவியின் மகள் சுஷ்மிதா  தயாரிக்கிறார்.