1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 10 ஜூன் 2023 (20:52 IST)

வருண் தேஜ்- லாவண்யா திரிபாதி ஜோடிக்கு சூப்பர் ஸ்டார் வாழ்த்து

Varun Tej and Lavanya Triphat
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை லாவண்யாவுக்கு திருமண நிச்சயதார்த்தம்   நடைபெற்றது. இவர்களுக்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சசிகுமார் நடிப்பில் உருவான பிரம்மன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் லாவண்யா திரிபாதி. இவர் மாயவன் படத்தில் நடித்த நிலையில், தற்போது தணல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவர் தெலுங்கு சினிமாவின் இளம் நடிகர் வருண் தேஜூவுடன் அந்தாரிக் படத்தில் இணைந்து நடித்தபோது, இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

இந்த நிலையில், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக  தகவல் வெளியானது.

அதன்படி,  நேற்று இவர்களின் திருமண நிச்சயதார்த்தம்  ஐதராபாத்தில் நடைபெற்றது.  இந்த  நிகழ்ச்சியில் இரு வீட்டாரும் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

வருண் தேஜ்- லாவண்யா திரிபாதி திருமண நிச்சயதார்த்ததிற்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி வாழ்த்துகள் கூறியுள்ளார். இதுபற்றி அவர்தன் டுவிட்டர் பக்கத்தில்,  ‘’வருண் தேஜ்- லாவண்யா திரிபாதி உங்கள் நிச்சயதார்த்தத்திற்கு வாழ்த்துகள். நீங்கள் இருவரும் சிறந்த ஜோடியாக இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் அன்பும், மகிழ்ச்சியும் பொழியும்’’ என்று தெரிவித்துள்ளார்

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் நாகபாபுவின் மகன் வருண் தேஜ் என்பது குறிப்பிடத்தக்கது.