1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By bala
Last Modified: வெள்ளி, 20 அக்டோபர் 2017 (11:15 IST)

‘மெர்சல்’ எடிட்டரைத் திட்டிய ரசிகர்கள்

‘மெர்சல்’ படத்தின் எடிட்டரான ரூபனை, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.




விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் தீபாவளியன்று ரிலீஸாகியுள்ளது ‘மெர்சல்’. தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இந்தப் படம் வெளியாகியிருக்கிறது. படம் எல்லோருக்கும் பிடித்திருப்பதால், பிளாக் பஸ்டர் ஹிட்டாகும் என்கிறார்கள் ரசிகர்கள். தமிழகத்தில் மட்டும் முதல்நாளில் 28 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது ‘மெர்சல்’.

2 மணி நேரம் 52 நிமிடங்கள் ஓடும் வகையில் இந்தப் படம் எடிட் செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில நிமிடங்கள் எடிட் செய்திருந்தால், படம் இன்னும் சூப்பராக இருந்திருக்கும் என்று கருதுகிறார்கள் ரசிகர்கள். இதுகுறித்து சமூக வலைதளங்களில் தங்களுடைய கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
ஒரு விஜய் ரசிகர் கோபமாகி ட்விட்டரில் எடிட்டர் ரூபனைத் திட்டியிருக்கிறார். “உங்கள் கருத்துக்கு நன்றி ப்ரோ. எடிட்டிங் என்னும் கலையை நான் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன். என்னுடைய அடுத்தடுத்த படங்களில் அதை மேம்படுத்திக் கொள்கிறேன். அதுவரை அமைதி உங்களுடன் இருக்கட்டும்” என அந்த ரசிகருக்குப் பதில் அளித்துள்ளார் ரூபன்.