புதன், 18 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : சனி, 10 ஜூன் 2023 (13:05 IST)

ஆவலுடன் காத்திருந்த விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் - என்ன தான் இருந்தாலும் இதை ஏத்துக்கவே முடியாது!

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான விஜய்  வருகிற ஜூன் 22ம் தேதி தனது 49வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். அன்றைய நாளில் அவர் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் அப்டேட் ஏதேனும் வெளியாகலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். 
 
அதன்படி லியோ படத்தின் கிலிம்ஸ் வீடியோ மற்றும் தளபதி 68 படத்தின் டைட்டில் வெளியாகும் என தகவல் வெளிவந்தது. ஆனால், உண்மையில் அந்த அப்டேட்டுகள் ஏதும் வெளியாக போவதில்லையாம். மாறாக விஜய்யின் பிறந்தநாள் அன்று லியோ படத்தின் போஸ்டர் மட்டும் வெளியாகுமாம். இது ஆவலுடன் காத்திருந்த தளபதி ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது.