ஜப்பான் படத்தை வெளுத்து வாங்கும் விஜய் ரசிகர்கள்… என்ன காரணம்?
கார்த்தி நடித்த ஜப்பான் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகி உள்ள நிலையில் இந்த படம் எதிர்பார்த்த அளவு இல்லை என்று தான் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கே எஸ் ரவிக்குமார் என்ற அரசியல்வாதிக்கு சொந்தமான நகைக்கடையில் 200 கோடி மதிப்புள்ள நகையை ஜப்பான் என்ற கார்த்தி திருடுகிறார் இதனால் அதிர்ச்சி அடையும் கே எஸ் ரவிக்குமார் காவல்துறையை அனுப்பி ஜப்பானை பிடிக்க உத்தரவிடுகிறார். ஜப்பான் காவல்துறையிடம் பிடிபட்டாரா என்பது தான் இந்த படத்தின் கதை.
மோசமான திரைக்கதை காரணமாக இந்த படம் ரசிகர்களை திருப்தி செய்யவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் ஜப்பான் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்யப்படவில்லை என சொல்லப்ப்டுகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் ஜப்பான் கதாபாத்திரம் ஒரு படம் எடுக்கும். அதற்குள் வரும் பாடலில் இந்த பாடலை பாடியது உங்கள் கோல்டன் ஸ்டார் ஜப்பான் என்று வருகிறது. இது நடிகர் விஜய்யை கேலி செய்வது போல உள்ளது என நினைத்து சமூகவலைதளங்களில் விஜய் ரசிகர்கள் ஜப்பான் படத்தை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.