கல்யாண வீட்டில் அடிதடி: மனைவியுடன் தப்பியோடிய விஜய்
நடிகர் விஜய் புதுச்சேரியில் தனது ரசிகர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொள்ள நேற்று சென்றிருந்தார். விஜய்யை பார்க்கவும் அவரை புகைப்படம் வீடியோ எடுக்கவும் ரசிகர்கள் குவிந்ததால் திருமண மண்டபத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் ரசிகர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பின்னர் அடிதடியாக மாறியதால் அந்த இடத்தில் ஒரு பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து விஜய் தனது மனைவியுடன் அந்த திருமண மண்டபத்தில் இருந்து தப்பி ஓடினார். இதுகுறித்த வீடியோ, புகைப்படங்கள் இணையதளத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
விஜய் போன்ற பெரிய நடிகர்கள் நேரடியாக திருமண மண்டபத்திற்கு செல்வதை தவிர்த்து திருமணம் முடிந்தவுடன் மணமக்களை தனது வீட்டிற்கு வரவழைத்து ஆசி வழங்கினால் இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்கலாம் என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் #பாண்டிச்சேரிரன் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் விஜய்க்கு ஆதரவான ஹேஷ்டேக்கையும் அவரது ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.