வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 10 அக்டோபர் 2020 (16:19 IST)

தேர்தலில் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை கூடாது – விஜய் தேவாரகொண்ட உளறல்!

தெலுங்கு முன்னணி நடிகர் விஜய் தேவாரகொண்டா தேர்தலில் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை கூடாது என கூறியுள்ளார்.

அர்ஜுன் ரெட்டி வேல்ட் பேமஸ் லவ்வர் ஆகிய படங்களில் சைக்கோவாக நடித்து பிரபலமானவர் விஜய்தேவாரகொண்டா. இவர் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் அரசியல் பற்றி கருத்துக் கூறினார். அதில் ‘அரசியலுக்கு வரும் அளவுக்கு எனக்கு பொறுமை இல்லை. ஆனால் அரசியலில் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை கூடாது. ஏனென்றால் எல்லோரும் பணத்துக்காகவும், மதுவுக்காகவும் வாக்களிக்கிறார்கள்.

அதற்காக பணக்காரர்களுக்கு மட்டும் வாக்களிக்க உரிமை தரப்பட வேண்டும் என நான் சொல்லவில்லை. படித்தவர்களும் பணத்துக்கு மயங்காத ஓரளவு நடுத்தர வர்க்கத்தினரும் மட்டுமே வாக்களிக்க வேண்டும். பலருக்கும் யாருக்கு ஏன் வாக்களிக்கிறோம் என்றே தெரியவில்லை. அரசியலில் சர்வாதிகாரமே மேல்’ எனக் கூறியுள்ளார். இந்த பேச்சுக்கு சமூகவலைதளங்களில் பெரும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.