விஜய் ஆண்டனியின் ‘காளி’: அஞ்சலி போர்ஷன் ஓவர்
விஜய் ஆண்டனி நடித்துவரும் ‘காளி’ படத்தில், அஞ்சலியின் போர்ஷன் ஷூட் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
‘வணக்கம் சென்னை’ படத்தைத் தொடர்ந்து கிருத்திகா உதயநிதி இயக்கிவரும் படம் ‘காளி’. விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துவரும் இந்தப் படத்தில், சுனைனா, அஞ்சலி, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் என 4 ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.
ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்ய, லாரன்ஸ் கிஷோர் எடிட் செய்கிறார். இந்தப் படத்துக்கு இசையமப்பதோடு, படத்தைத் தயாரித்து, வெளியிடுகிறார் விஜய் ஆண்டனி. இந்த வருடம் மார்ச் 25ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
இந்தப் படத்தின் ஷூட்டிங், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அஞ்சலியின் போர்ஷன் இன்றோடு ஷூட் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அஞ்சலியே ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.