1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : செவ்வாய், 26 டிசம்பர் 2017 (10:08 IST)

ஜெய்யுடன் பணிபுரிவது அற்புதமான அனுபவம் - அஞ்சலி

‘ஜெய்யுடன் பணிபுரிவது அற்புதமான அனுபவம்’ என நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார்.
சினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் நடித்துள்ள படம் ‘பலூன்’. திகில் படமான இது, வருகிற வெள்ளிக்கிழமை ரிலீஸாக இருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். சாந்தினி தமிழரசன், யோகி பாபு ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
 
“ஒரு படத்தின் முழு கதையையும் கேட்டறிந்து, படித்த பிறகே அதில் நடிக்க ஒப்புக்கொள்வேன் . இந்த 'பலூன்' படத்தில் நான் நடிக்க ஒப்புக் கொண்டதற்கு  காரணம், எனக்கு பேய்ப் படங்கள் பிடிக்கும் என்பது மட்டுமின்றி, இப்படத்தின் கதை மற்றும் சஸ்பென்ஸ் அம்சங்கள் என்னை மிகவும் கவர்ந்தது. 'பலூன்' ஒரு திகில் படமாக இருந்தாலும், காதல், காமெடி உள்ளிட்ட அனைத்து உணர்வுகளும் அழகான கலவையில் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் இயக்குனர் சினிஷ் அருமையாக வடிவமைத்துள்ளார். 
 
ஜெய்யுடன் பணிபுரிவது என்றுமே ஒரு அற்புதமான அனுபவம். இந்த படத்தில் அவர் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படத்தில் எனது கதாபாத்திரம் சராசரியானது கிடையாது. 'பலூன்' படத்தை ரசிகர்கள் நிச்சயம் ரசித்து மகிழ்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார் அஞ்சலி.