1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 1 மார்ச் 2025 (10:26 IST)

சிவகார்த்திகேயன் 100 கோடி சம்பளம் வாங்கலாம்… ஆனா விஜய் ஆக முடியாது –பிரபல நடிகர் கமெண்ட்!

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் அடைந்திருக்கும் வளர்ச்சி என்பது அபரிமிதமானது. சமீபத்தில் ரிலீஸான அவரது ‘அமரன்’ திரைப்படம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. தமிழ் சினிமாவில்  ரஜினி, விஜய், கமல் மற்றும் அஜித் ஆகியோரைத் தவிர வேறு யாரும் செய்ததில்லை.

அதனால் தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் சிவகார்த்திகேயன்தான் என்று இப்போதே பேச்சுகள் எழத் தொடங்கிவிட்டன். இந்நிலையில் இது குறித்து தற்போது பிரபல நடிகர் ஷாம் ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அதில் “தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர்- சிவாஜி, ரஜினி – கமல், விஜய் –அஜித் என்ற சூப்பர் ஸ்டார்களின் காலம் முடிந்து விட்டது. இப்போது விஜய்க்கு மாற்று சிவகார்த்திகேயன் என நாமதான் சொல்லிகிட்டு இருக்கோம். விஜய் அண்ணா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. ஆனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிவகார்த்திகேயனுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனா அதுக்காக அடுத்த விஜய் என்று சொல்ல முடியாது. நீங்க 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கலாம். ஆனா விஜய்யாக முடியாது” எனக் கூறியுள்ளார்.