விஜய் புரட்சித்தலைவர், சங்கீதா புரட்சித்தலைவி: மதுரை ரசிகர்களின் போஸ்டர் அட்ராசிட்டி
விஜய் புரட்சித்தலைவர், சங்கீதா புரட்சித்தலைவி
நேற்று விஜய்யின் திருமண நாள் கொண்டாடப்பட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர்களை விஜய்யின் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் ஒட்டி வந்தனர். இந்த நிலையில் மதுரையில் ஒட்டப்பட்ட ஒரு போஸ்டரில் விஜய்யை புரட்சித்தலைவர் என்றும் விஜய் மனைவி சங்கீதாவை புரட்சித் தலைவி என்றும் குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
விஜய்-சங்கீதா திருமணமாகி இருபது ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து அவரது ரசிகர்கள் ஒரு விழாபோல் கொண்டாடினார்கள். இந்த நிலையில் மதுரையில் ஒட்டப்பட்டிருந்த ஒரு போஸ்டரில் புரட்சித்தலைவர் விஜய் மற்றும் புரட்சித்தலைவி சங்கீதா என்ற ஒட்டப்பட்டிருந்தது
மேலும் விஜய் மற்றும் சங்கீதா ஆகிய இருவரையும் எம்ஜிஆர் மட்டும் ஜெயலலிதா போன்று சித்தரித்து அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டு இருந்ததால் அரசியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அதிமுகவினர் இந்த போஸ்டருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
விஜய் அரசியலுக்கு வருவதற்காக புதிய கட்சி ஒன்றை தொடங்க ஏற்பாடு செய்து வருவதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில் தற்போது விஜய்யை எம்ஜிஆர் போன்றும், சங்கீதாவை ஜெயலலிதா போன்றும் உருவகப்படுத்தி ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த போஸ்டரால் விஜய் மட்டுமின்றி சங்கீதாவும் அரசியலுக்கு வருவாரா என்ற யூகத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது